பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் தேசத்தின் சாதனைகளை கொண்டாட முடியாது.. கிரண் ரிஜிஜூ

 
பெண்கள்

ஒரு சமூகம் அல்லது தேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் அதன் (தேசத்தின்) சாதனைகளை கொண்டாட முடியாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்த குழந்தைகள் பாலியல் வன்கொடுமை பொருள் என்ற தேசிய மாநாட்டை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தொடங்கி வைத்தார். அந்த மாநாட்டில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி (ஓய்வு) அருண் குமார் மற்றும் உரிமைக் குழு உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள்  உள்பட பலர் பங்கேற்றனர்.  

கிரண் ரிஜிஜூ

அந்த மாநாட்டில் கிரண் ரிஜிஜூ உரையாற்றுகையில் கூறியதாவது:  ஒரு சமூகம் அல்லது தேசத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் அதன் (தேசத்தின்) சாதனைகளை கொண்டாட முடியாது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குறிப்பாக குழந்தை பாலியல் துஷ்பிரயோகம்.. நான் உணர்கிறேன், அது அனைவருக்கும் உள்ளது. இது மிகப்பெரிய மற்றும் குழப்பமான சவால்கள். 

பெண் குழந்தைக்கு எதிரான குற்றம்

எல்லா குற்றங்களும் மோசமானவை ஆனால் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை ஜீரணிக்க கடினமாக உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை நீங்கள் எவ்வாறு செய்ய முடியும்?. நமது அணுகுமுறையில் நாம் மிகவும் தீவிரமாக இருக்க வேண்டும். அதை (குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்) வெறும் குற்றமாக கருத முடியாது. நீங்கள் அதை ஒரு குற்றமாக பார்த்தால், நாம் அதை ஒரு சாதாரண  குற்றமாகவே சமாளிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.