எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு? - முழு விவரம் இதோ!

 
budget

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது காணலாம். 

நாடாளுமன்றத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 8வது முறையாக ஒன்றிய பட்ஜெட் 2025-2026ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்தார். பட்ஜெட்டை புறக்கணித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் விதமாக புதிய வருமான வரி மசோதாவை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அறிவித்துள்ளார். புதிய வருமான வரிமுறையில் 12 லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு வரியில்லை.

இந்த நிலையில், எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் வருமாறு:  அதிகபட்சமாக போக்குவரத்து துறைக்கு ₹5.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பாதுகாப்பு துறைக்கு ₹4.91 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு ₹1.71 லட்சம் கோடியும், கல்வி துறைக்கு ₹1.28 லட்சம் கோடியும், உள்துறைக்கு ₹2.33 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சிதுறைக்கு ₹2.66 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்கு ₹98,311 கோடியும், நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ₹69,777 கோடியும், சமூக நலத்துறைக்கு ₹60,052 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.