நொடி பொழுதில் சரிந்து விழுந்த மேம்பாலம்-10 பேர் படுகாயம்

 
as

விசாகப்பட்டினத்தில்  கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது.

Under-Construction ROB Bridge Collapses in Visakhapatnam, Seven Injured

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், கஜுவாக்கா அருகே உள்ள துங்கலம் என்ற இடத்தில் கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது. துங்கலம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் சில காலமாக முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில்  மூன்றாவது மற்றும் நான்காவது தூண்களுக்கு இடையில் காற்றோட்டக் குழாய் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்தபோது திடீரென பாலத்தின் கட்டுமானம் இடிந்து விழுந்தது. விபத்து நடந்த நேரத்தில் சுமார் 10 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்துகொண்டிருந்தனர். இந்தச் சம்பவத்தில் ஏழு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதற்கு முக்கிய காரணம்  தொழிலாளர்கள் மதிய உணவு இடைவேளைக்குச் சென்றிருந்ததால், விபத்து நடந்த நேரத்தில் அங்கு குறைவானவர்களே இருந்தனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை  என்பதால் பலர் வேலைக்கு வரவில்லை என்றும், இல்லையெனில் விபத்தின் தீவிரம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 

பாலம் இடிந்து விழுந்த உடனேயே, போலீசாரும் மீட்புக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  காயமடைந்தவர்களை உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாலத்தின் கீழ் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகள் யாரேனும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் தேடுதல் பணியை தொடங்கி மேற்கொண்டுள்ளனர். அனைத்துத் தொழிலாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதில் அதிகாரிகள் நிம்மதியடைந்துள்ளனர், ஆனால் இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே தெளிவு முடிவு கிடைக்கும் என்று போலீசார் கூறியுள்ளனர். காயமடைந்த தொழிலாளர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுமானக் குறைபாடுகளால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.