2024ல் பிரதமராவது பற்றி நான் கனவு காணவில்லை.. உத்தவ் தாக்கரே

 
நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும்…..கொந்தளித்த சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே! சூடு பிடிக்கும் ஆரே விவகாரம்

2024ல் பிரதமராவது பற்றி நான் கனவு காணவில்லை என்று உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவுத், எங்கள் கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வுக்கு எதிராக போராடுவதாகவும், பிரதமர் பதவிக்கான எதிர்க்கட்சியின் முகமாக அவரை பார்க்க முடியும் என்று தெரிவித்து இருந்தார். ஆனால் நான் பிரதமர் பதவி பற்றி கனவு காணவில்லை என்று உத்தவ் தாக்கரே தெரிவித்தார். உத்தவ் பாலசாகேப் தாக்கரே கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியதாவது: (2024ல்) பிரதமர் பதவியை பற்றி  நான் கனவு காணவில்லை. 

சஞ்சய் ரவுத்

ஆனால் 2024ல் ஒரு மாற்றத்தை கொண்டு வர எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். கசாபா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி வேட்பாளரின் வெற்றி,  (எதிர்க்கட்சிகள்) ஒன்றுபட்டால் பா.ஜ.க.வுக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்பதை நிரூபித்துள்ளது. மத்திய அமைப்புகளின் முறைகேடு குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். எதிர்கட்சி தலைவர்கள் சிக்கலில் உள்ளனர். 

பா.ஜ.க.

மத்திய அமைப்புகளின் தொடர்ச்சியான தவறான பயன்பாடு நிறுத்தப்படவில்லை. இது ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை. தங்களை தோற்கடிக்க முடியாது என்று அவர்கள் (காங்கிரஸ்) நினைத்தார்கள் ஆனால் அவர்கள் தோல்வியை எதிர்கொண்டார்கள், இப்போது பா.ஜ.க.வுக்கும் அதே நிலைதான். ஆனால் காலம் எல்லோருக்கும் மாறுகிறது. அவர்களும் (பா.ஜ.க.) வீழ்வார்கள் மற்றும் தோற்கடிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.