உத்தரகாண்ட் மாநிலத்தில் அமலுக்கு வருகிறது பொது சிவில் சட்டம்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் நாட்டிலேயே முதல்முறையாக இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த சட்டத்தை தங்களது மாநிலங்களில் அமல்படுத்த விடமாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்கள் தெரிவித்து வருகின்றன. இருந்த போதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நாட்டிலேயே முதல்முறையாக இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது. தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.