ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் காலமானார்

 
t

ராமோஜி குழும நிறுவனங்களின் தலைவரும், ஈநாடு பத்திரிகை நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல்நல குறைவால் ஹைதராபாத்தில் இன்று காலமானார்.

r

 ஈடிவி நெட்வொர்க் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியின் தலைவரான ராமோஜி ராவ், ஹைதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். 

rr
உயர் இரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக அவர் ஜூன் 5 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சூழலில் இன்று அவர் உயிர் பிரிந்தது. 

rr

அவரது மறைவுக்கு பாஜக மூத்த தலைவர் ஜி கிஷன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, தெலுங்கு ஊடகம் மற்றும் பத்திரிக்கைத் துறைக்கு அவர் ஆற்றிய "குறிப்பிடத்தக்க பங்களிப்பு" "பாராட்டத்தக்கது" என்று கூறினார்.