முடிவுக்கு வந்தது ட்விட்டர் vs மத்திய அரசு சண்டை… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

 

முடிவுக்கு வந்தது ட்விட்டர் vs மத்திய அரசு சண்டை… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

டெல்லி விவசாயிகள் போராட்டத்திலிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் உரசல்கள் ஏற்பட்டு வருகின்றன. அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்களின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் அது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறி கணக்குகளை முடக்க ட்விட்டர் மறுத்தது. அப்போதிருந்தே ட்விட்டருக்கும் மத்திய அரசுக்கும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. இச்சூழலில் மத்திய அரசு புதிய சட்ட விதிகளைக் கொண்டுவந்தது. இந்த விதிகளுடன் உடன்பட மே 25ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

முடிவுக்கு வந்தது ட்விட்டர் vs மத்திய அரசு சண்டை… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

ட்விட்டரை தவிர மற்ற சமூக வலைதள நிறுவனங்களும் அரசின் விதிகளுக்கு இணங்கின. ஆனால் ட்விட்டர் மட்டும் அரசுக்கு தண்ணி காட்டி வந்தது. மாறாக புதிய விதிகள் இந்தியர்களின் கருத்துரிமைக்கு எதிராக இருப்பதாக குற்றஞ்சாட்டியது. இது மத்திய அரசைக் கோபத்துக்குள்ளாக்கியது. ட்விட்டருக்கான சட்டப் பாதுகாப்பை அரசு விலக்கிக் கொண்டது. இதன்மூலம் ட்விட்டரில் யார் என்ன சர்ச்சை கருத்து கூறினாலும் அதற்கு ட்விட்டரே முழு முதற் பொறுப்பு. சட்ட ரீதியாக வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்பதே அதற்கு அர்த்தம்.

முடிவுக்கு வந்தது ட்விட்டர் vs மத்திய அரசு சண்டை… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

இதற்குப் பிறகு பல கேஸ்களில் ட்விட்டர் இந்தியாவின் மேலாண் இயக்குநர் மனிஷ் மகேஸ்வரியின் மீது பாய்ந்தன. இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மோதலின் உச்சமாக ஒரு வாரத்திற்கு முன் முன்னாள் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தின் ட்விட்டர் கணக்கையே ட்விட்டர் முடக்கியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ட்விட்டரை சராமரியாக விமர்சித்திருந்தார் அவர். இச்சூழலில் புதிய அமைச்சராகப் பதவியேற்ற அஸ்வினி வைஷ்ணவ் பதவியேற்ற கையோடு ட்விட்டருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே ட்விட்டருக்கு எதிரான வழக்கு விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

முடிவுக்கு வந்தது ட்விட்டர் vs மத்திய அரசு சண்டை… இந்திய புகார் அதிகாரி நியமனம்!
மனிஷ் மகேஸ்வரி

இந்த வழக்கு விசாரணையின்போது, விதிகளுடன் உடன்பட இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக்கொள்வீர்கள்; உங்கள் இஷ்டத்துக்கு கால அவகாசம் வழங்க முடியாது என நீதிமன்றம் ட்விட்டரிடம் கேட்டது. அதற்குப் பதிலளித்த ட்விட்டர், “விதிகளின்படி இந்திய புகார் அதிகாரி ஒருவரை நியமித்தோம். அவர் திடீரென்று ராஜினாமா செய்தார். அவருக்குப் பிறகு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை நியமித்தோம். அது செல்லாது என மத்திய அரசு நிராகரித்தது. அதிகாரியை நியமிக்கவும் விதிகளுடன் முழுவதுமாக உடன்படவும் 8 வாரங்கள் தேவை” என்று கோரிக்கை விடுத்திருந்தது. இச்சூழலில் இந்திய புகார் அதிகாரியை இன்று ட்விட்டர் நியமனம் செய்துள்ளது.

முடிவுக்கு வந்தது ட்விட்டர் vs மத்திய அரசு சண்டை… இந்திய புகார் அதிகாரி நியமனம்!

அதன்படி ட்விட்டர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகார் அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது. அவரின் முகவரியையும் இமெயில் முகவரியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரி புகாரை 24 மணி நேரத்துக்குள் ஏற்றுக்கொண்டு, அந்த புகார் மீது அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகாரைப் பெற்றுக்கொண்டது தொடர்பாக புகார்தாரருக்கு ஒப்புகையும் வழங்கிட வேண்டும். இது மத்திய அரசின் புதிய ஐடி விதிகளில் ஒன்றாகும். அடுத்தடுத்து மத்திய அரசின் அனைத்து விதிகளுடனும் ட்விட்டர் உடன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.