2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் டிவி, ஃப்ரிட்ஜ் பரிசு..

 
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களை ஊக்குவிக்கும் வகையில், தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் டிவி,குளிர்சாதன பெட்டிகள் போன்ற பம்பர் பரிசுகள்  வழங்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்  கொரோனா வைரஸின் தாக்கம் முழுமையாக குறைந்தபாடில்லை. கொரோனா இரண்டாவது அலையை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வரும் சூழலில், மூன்றாம் அலைக்கான வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பரவலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க தடுப்பூசி மட்டுமே தற்போது ஆறுதலாக இருந்து வருகிறது.

1

அதனால், இந்தியா, அமெரிக்கா ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் இத்தாலி, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. அந்தவகையில் இந்தியாவில் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும்  ஏராளமான மக்கள்  தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வராத நிலையில், பல்வேறு பரிசுத் திட்டங்களை மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.

அதன்படி,  2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, பிரிட்ஜ், மிக்ஸி போன்ற பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என்று பீகார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே அறிவித்துள்ளார்.  நவம்பர் 27  முதல் 31 ம் தேதி வரை கொரோனா 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுகு மட்டுமே குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2

மொத்தம் 10 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், மாவட்டத்திற்கு 114 பேர் என, இந்த முறை மட்டும் 2,670 பேருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. மேலும் 26,700 பேருக்கு ஆறுதல் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.