எம்.எல்.ஏ.தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காததால் காங்கிரஸ் நிர்வாகி தற்கொலை

 
Telangana Polls Congress Leader kasula balaraju

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ.தேர்தலில் போட்டியிட சீட்டு கிடைக்காததால் காங்கிரஸ் நிர்வாகி காசுலா பாலராஜு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தெலங்கானா காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. தேர்தலில் போட்டியிட சீட்டு விற்பதாகக் கூறி, காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேவந்த் ரெட்டியின் உருவ பொம்மைகளை பல இடங்களில் எரித்தும், கட்சி அலுவலகங்களை உடைத்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  பான்சுவாடா தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு எதிர்பார்த்து காத்திருந்த காசுலா பாலராஜு மூன்றாவது பட்டியலிலும் வாய்ப்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பான்சுவாடா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக எனுகுலா ரவீந்தர் ரெட்டியை கட்சித் தலைமை நியமித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வரும் காசுலா பாலராஜு சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்  மேற்கொண்டார். இந்நிலையில் இன்று வீட்டுக்குள் சென்று மோனோ குரோட்டோபாஸ் என்ற ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக கட்சியினர் அவரை சிகிச்சைக்காக நிஜாமாபாத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கவலைகிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பிஆர்எஸ் கட்சி ஒருபுறம் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி முன்னேறி வரும் நிலையில், காங்கிரசின் தற்போதைய நிலை, காங்கிரஸ் தொண்டர்களையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கட்சியை விட்டு எப்போது, ​​யார் வெளியேறுகிறார்கள் என்று தெரியாமல், மூத்த தலைவர்கள் தலையை பிடித்துக் கொண்டுள்ளனர்.