திரிபுரா மாநில முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பிப்லப் குமார் தேப்

 
Biplam kumar

திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 

60 தொகுதிகள் கொண்ட திரிபுரா மாநிலத்திற்கு கடந்த 2018ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் அதன்கூட்டணி கட்சியான, IPFT கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கூட்டணி கட்சியின் ஆதரவை பெற்று அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியமைத்தது. பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைத்ததை தொடர்ந்து, பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக பொறுப்பேற்றார். 

bjp


இந்நிலையில் திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.  தனது பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயண் ஆர்யாவிடம் வழங்கியதாக பிப்லப் தேப் அறிவித்துள்ளார். 2 நாட்களுக்கு முன் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்த நிலையில், இன்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, திரிபுரா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர், இன்றே அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.