அமெரிக்காவிலிருந்து வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்... தோழியுடன் காரில் சென்றபோது மரணம்

 
s

டெல்லியில் கார் கால்வாயில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய 20 வயது மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கொல்கத்தாவில் பணிபுரியும் ராணுவ அதிகாரியின் மகன் யஷ்வேந்திரா (20). சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய இவர், நேற்று காலை தனது தோழியின் காரை டெல்லி வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள நாங்கல் தேவாட் சிக்னல் அருகே ஓட்டிச் சென்றார். அவருடன் அவருடைய தோழியும் உடன் சென்றார். அப்போது  நங்கல் தேவாட் வடிகால் அருகே பயங்கரமான வளைவில் திரும்ப முயன்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி, அருகில் இருந்த திறந்தவெளி சாக்கடை கால்வாய்க்குள் தலைகீழாக கவிழ்ந்தது. காவல்துறையினர் வாகனத்தை கால்வாய்லிருந்து வெளியே இழுத்து, யஷ்வேந்திராவை மீட்டனர். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

மழை காரணமாக கார் விபத்துக்குள்ளான சாலை சேறும் சகதியுமாக இருந்ததாக காவல்துறை தெரிவித்தது. அதுவே கார் சறுக்கி, ஒரு மரத்தில் மோதி, கவிழ்ந்து கால்வாயில் விழக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அவர்கள் கூறினர். நல்வாய்ப்பாக யஷ்வேந்திராவின் தோழி சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.