ஆன்லைன் ரம்மி தடை விவகாரம் - நாடாளுமன்றத்தில் விவாதிக்க டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ்

 
tr

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்து 44 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 

online game

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து நாளை நடைபெறும் மக்களவையில் விவாதிக்கக்கோரி திமுக சார்பில் கன ஈர்ப்பு நோடீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி வரும் 13ம் தேதி தொடங்குகி ஏப்ரல் 6ம் தேதி நிறைவடைகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான மானிய கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்படவிருப்பதாக தெரிகிறது. மாநிலங்களவையில் 26 மசோதாக்கள், மக்களவையில் 9 மசோதாக்கள் என 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

அதேசமயம் லாலுபிரசாத் மற்றும் மணீஷ் சிசோடியாவின் மீதான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரின் விசாரணையை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட முடிவு செய்துள்ளன.