கை,கால்களை கட்டிப்போட்டு கணவனின் ஆண் உறுப்பை கத்தியால் கிழித்த மனைவி! பரபரப்பு வீடியோ

 
cctv

கை,கால்களை கட்டிப்போட்டு கணவனின் ஆண் உறுப்பை கத்தியால் கிழித்த மனைவியை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Bijnor woman

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், போதை கலந்த பாலை கணவருக்கு கொடுத்து, மயக்கத்தை ஏற்படுத்தி பிறகு அவரது கை, கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான். சிகரெட்டால் சுட்டும், ஆண் உறுப்பை கத்தி கொண்டு காயப்படுத்தியும் கொடுமை செய்துள்ளார். கள்ள உறவை கணவன் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் மனைவி மெஹர் ஜஹான் இக்கொடுமையை செய்துள்ளார்.
ஏற்கனவே பல முறை இதே தகராறில் கணவனை அடித்து துன்புறுத்தியிருக்கிறார், இக்கொடுமையை முடிவுக்கு கொண்டு வர முன்னெச்சரிக்கையாக கேமிரா வாங்கி அறையில் பொருத்தியுள்ளார் கணவர். இக்காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.