சுங்கச்சாவடியில் நாளை நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு!

 
tn

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜூன் 3ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமலுக்கு வருகிறது.

toll

நாடு முழுவதும் சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.  ஒரே நாளில் திரும்பும் கட்டணம் ரூபாய் 5லிருந்து 20 வரையிலும் , மாதாந்திர பாஸ் ரூ.100லிருந்து 400 வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  சுங்க கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பினர் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது சுங்க சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சுங்க சாவடிகளை முழுமையாக அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த கட்டண உயர்வை மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.  இருப்பினும்  மக்களவைத் தேர்தலையொட்டி சுங்க கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தவில்லை. கட்டணத்தை உயர்த்தி பிறப்பித்த உத்தரவை திரும்ப பெற்றது.

toll plaza

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஜூன் 3ஆம் தேதி நள்ளிரவு முதல் புதிய சுங்கக் கட்டணம் அமல் ரூ. 5 முதல் 20 ரூபாய் வரை விலை உயர்வு அமலாக உள்ளது என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.