தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது குழந்தை பலி

தெலங்கானா ஹைதராபாத்தில் தெரு நாய்கள் கடித்து குதறியதில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
நாடு முழுவதும் தெருநாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் கடித்து காயமடைந்து வருவதோடு பலர் மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் - ஜவஹர் நகர் அடுத்த ஆதர்ஷா நகரில் விஹான் (2) என்ற சிறுவன் வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தான். அந்த குழந்தையின் தலை முடியை கவ்வி இழுத்து சென்ற தெரு நாய்கள், கடித்து குதறியது. சம்பவ இடத்தில் சிதறி கிடந்த குழந்தையின் தலை முடியை பார்த்து, பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பொதுமக்கள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
குழந்தை இறந்தது குறித்து முதல்வர் ரேவந்த் ரெட்டி வேதனை தெரிவித்ததுடன், நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் தெரு நாய்கள் அச்சுறுத்தும் பகுதிகளில் வசிப்பவர்களிடமிருந்து புகார்களைப் பெற கட்டணமில்லா எண் அல்லது அழைப்பு மையம் ஒன்றை ஏற்படுத்துமாறு அதிகாரிகளிடம் கூறினார்.