நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கியது இன்றைய கூட்டம்!!

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் தொடங்கியது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது. வருகிற 22ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். இந்த கூட்டத்தொடரில் நிகழ்ச்சிக்கான நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். சிறப்பு கூட்ட தொடரில் முதல் நாள் நாடாளுமன்றத்தின் பழைய கட்டிடத்திலும் எஞ்சிய நான்கு நாட்கள் புதிய கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நேற்று அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு கூட்டத்தொடரானது பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறுகிறது . நாடாளுமன்ற சாதனைகள், நினைவுகள், அனுபவங்கள் குறித்து இன்று சிறப்பு விவாதம் நடைபெறுகிறது. நாளை முதல் புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறுகிறது .