எல்.ஐ.சி பங்குகளை வாங்க இன்றே கடைசி நாள்..

 
எல்.ஐ.சி பங்குகளை வாங்க இன்றே கடைசி நாள்..


எல்.ஐ.சி பங்குகளை வாங்க இன்றே கடைசி நாள் என்பதால்,  பங்குதார்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்..

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சியில்  உள்ள தனது பங்குகளை விற்பனை செய்து மத்திய அரசு திட்டமிட்டது.   அதன்படி கடந்த மே 4ம் தேதி  முதல்   எல் ஐ சியின் மெகா ஆரம்ப  பொதுபங்கு வெளியிடப்படுகிறது.  இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் மூலம் LICயின்  3.5% பங்குகளை விற்பனை செய்து,   ரூ. 21 ஆயிரம் கோடி நிதி திரட்டவும் மத்திய  அரசு முடிவு செய்திருக்கிறது.  இந்நிலையில் இந்த பொதுப்பங்குக்கு விண்ணப்பிக்க  இன்றே கடைசிநாளாகும்.  

எல்ஐசி

மே. 17 ஆம் தேதி எல்.ஐ.சி பங்குகள் மும்பை மற்றும்  தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொதுமக்கள் 1.55 மடங்கும், , பாலிசிதாரர்கள் 4.94 மடங்கும் , எல் ஐ,சி ஊழியர்கள் 3,74 மடங்குக்கும் அதிகமாக  விண்ணப்பித்துள்ளனர். ஒரு பொது பங்கின் விலை ரூ.902 – ரூ.949 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களுக்கு 60  ரூபாயும்,  சில்லறை முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ரூ.45 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச், ஏப்ரல் பிரீமிய தொகை செலுத்துவதற்கான காலஅவகாசம் 30 நாள் நீட்டிப்பு…… எல்.ஐ.சி. தகவல்….

ஒரு ஒதுக்கீட்டில் 16 பங்குகள் இருக்கும், அதன்படி ஒரு தனிநபர் 14 ஒதுக்கீடுகள் வரை விண்ணப்பிகலாம் என கூறப்பட்டுள்ளது.  எல்.ஐ.சி பங்குகளை வாங்குவதற்கான விண்ணப்பங்களை பெற எஸ்.பி.ஐ மற்றும் ஏ.எஸ்.பி.ஏ வங்கிக்கிளைகள் நேற்றும் ( ஞாயிற்றுக்கிழமை ) திறந்திருந்தன. எல்.ஐ.சி பங்குகளை வாங்க இன்றே கடைசி நாள் என்பதால்,  எல்.ஐ.சி பங்குகளை விற்பனை திட்டமிட்டுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.