காங்கிரஸ் தலைமையிலான பேரணியை புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்.. இனி இப்படித்தான் - மம்தா கட்சி விளக்கம்

 
நாட்டில் சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது – மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி காட்டம்

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் காங்கிரஸ் இணக்கமாக உள்ளது, ஆகையால் காங்கிரஸ் தலைமையில் நடக்கும் கூட்டங்களில் நாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பந்தோபாதயாய் தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே தலைமையில், சமாஜ்வாடி, தி.மு.க., ஆம் ஆத்தி, பி.ஆர்.எஸ். உள்ளிட்ட 17 கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள், அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறையிடம் மனு கொடுக்க நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றனர். எதிர்க்கட்சிகளின் பேரணியை கருத்தில் கொண்டு விஜய் சவுக் மற்றும் அமலாக்கத்துறை அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களில் பாதுகாப்பு  போடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ்

எதிர்க்கட்சி எம்.பி.க்களனி பேரணி விஜய் சவுக்கை அடைந்தவுடன், அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதேசமயம், எதிர்க்கட்சிகளின் இந்த பேரணியை தேசியவாத காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பு  தெரிவித்து கிட்டத்தட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த  பேரணியில் கலந்து கொண்ட நிலையில், இந்த இரண்டு கட்சிகளும் புறக்கணித்தது பெரும் வியப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. பந்தோபாதயாய் கூறியதாவது: 

பந்தோபாதயாய்

நாங்கள் வேறு எந்த போராட்டத்திலும் பங்கேற்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் தனது சொந்த பிரச்சினைகளை மற்றும் அஜண்டாவை எதிர்க்கும். எங்கள் மாநிலத்தில் பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவற்றுடன் காங்கிரஸ் முற்றிலும் ஒத்துழைக்கிறது. எனவே காங்கிரஸ் தலைவர்கள் அழைக்கும் கூட்டங்களுடன் நாங்கள் கைகோர்க்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.