ரூ.20 கோடி மதிப்புள்ள 4,100 கிலோ கஞ்சா எரித்து அழிப்பு

 
ச்

திருப்பதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 20 கோடி மதிப்புள்ள 4,100 கிலோ கஞ்சாவை அதிகாரிகள் எரித்து அழித்தனர்.

tirupati police destroy ganja

திருப்பதி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 4,100 கிலோ கஞ்சா நீதிமன்ற அனுமதியுடன் ரேணிகுண்டா மண்டலம், துக்கிவாக்கத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் மாவட்ட கலெக்டர்  வெங்கடேஸ்வரர் மற்றும் எஸ்.பி.  சுப்பாராயுடு  முன்னிலையில் அழிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கலெக்டர் கஞ்சா சாகுபடி, போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவற்றிற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு  முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக, ஈகிள் தனிப்படை உருவாக்கப்பட்டு ஐ.ஜி. தர அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

திருப்பதி மாவட்டத்தில் கடந்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகளில் 208 வழக்குகளில்  கைப்பற்றப்பட்ட ரூ. 20 கோடி மதிப்பிலான 4,100 கிலோ கஞ்சா  துக்கிவாக்கத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் வைத்து எரிக்கப்பட்டது.  பெங்களூரு மற்றும் சென்னைக்கு கஞ்சா கடத்துவதற்கான ஒரு இடைவழியாக திருப்பதி நகரம் உள்ளது. அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பெரும்பாலும் விசாகப்பட்டினம் மற்றும் காக்கிநாடா வழியாக பேருந்து மற்றும் பிற தனியார் வாகனங்களில் திருப்பதிக்கு வந்து, இங்கிருந்து சென்னை, பெங்களூரு மற்றும் கேரளாவுக்குச் கடத்தி செல்கின்றனர். ரயில்கள், பேருந்துகள் மற்றும் பயணப் பெட்டிகளை ஆய்வு செய்து அவற்றைப் பறிமுதல் செய்வதற்காக மாவட்ட எஸ்.பி. தலைமையில் தேடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவைப் பறிமுதல் செய்வதோடு, 8, 9, 10 மற்றும் இண்டர்மிடியட் வகுப்புகளைச் சேர்ந்த ஒரு லட்சம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரே தளத்திற்குக் கொண்டுவரப்பட்டு, கஞ்சாவினால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து இணையவழியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் கஞ்சா பயன்பாட்டைக் கட்டுப்படுத்த  மாவட்டத்தில் சுமார் 15 கஞ்சா தடுப்புக் காவல் வழக்குகள் (குற்றத்தடுப்பு ) பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மாநிலத்திலேயே மிக அதிகமானது  கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்கள் தொடர்பாக மாநில அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளின்படி, எதிர்காலத்தில் கஞ்சாவைக் கடத்துபவர்கள், சேமித்து வைப்பவர்கள், ஒத்துழைப்பவர்கள் அல்லது பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதில் பொதுமக்களும் ஊடகங்களும் ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.