திருப்பதி: ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!!

 
tirupati

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில்  காத்திருப்பதை தவிர்ப்பதற்காக திருப்பதியில் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

tirupathi

இந்த டோக்கன்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி  கூட்ட நெரிசலை தவிர்க்க  23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையிலான டோக்கன்கள் 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.  இந்த டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

tirupathi

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று (ஜன.18) தொடக்கம் ஏப்ரல் மாத தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்கி ஜன.24 வரை நடைபெறுகிறது.  வழிபாட்டு கட்டண சேவை டிக்கெட், தரிசன டிக்கெட் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் பெறலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.