திருப்பதி லட்டு விவகாரம்- சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலின் மாண்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதி தலைமைச் செயலகத்தில் உயர்மட்ட ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் தலைமைச் செயலாளர் நிரப்குமார் பிரசாத், அமைச்சர்கள் ஆனம் ரமணராய ரெட்டி, நிம்மலா ராமாநாயுடு, அனானி சத்யபிரசாத், கொல்லு ரவீந்திரா, கொலுசு பார்த்த சாரதி மற்றும் உயர் அதிகாரிகள் திருமலை விவகாரம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், கடந்த அரசின் லட்டு தயாரிப்பில் நடந்த தவறுகள் குறித்து இன்று மாலைக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தேவஸ்தான இஓவுக்கு முதல்வர் உத்தரவிட்டார். திருமலையின் புனிதத்தைப் பாதுகாப்பது தொடர்பாக ஆகம , ஆன்மீக சான்றோர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். பக்தர்களின் நம்பிக்கையும், கோயிலின் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும். ஏழுமலையான் கோயிலின் மாண்பு மற்றும் பக்தர்களின் உணர்வுகளுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.