திருப்பதி ஏப்ரல் மாத தரிசனம் - நாளை முதல் முன்பதிவு

 
tirupati

திருப்பதியில் நாளை முதல் ஏப்ரல் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

tirupathi

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில்  காத்திருப்பதை தவிர்ப்பதற்காக திருப்பதியில் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த டோக்கன்கள் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பையொட்டி  கூட்ட நெரிசலை தவிர்க்க  கடந்த 23ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரையிலான டோக்கன்கள் 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது.  இந்த டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

tirupathi

இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் ஏப்ரல் மாத தரிசனத்துக்கான ரூ.300 கட்டண ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு நாளை காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் இணையதளம் பக்கத்தில் வெளியாகிறது.  tirupatibalaji.ap.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று  தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.