பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபரீதம் - 5 வயது சிறுவன் பலி!!
Jul 2, 2024, 08:33 IST1719889418621
இந்திய அணியின் டி20 உலக கோப்பை வெற்றியை கொண்டாட பட்டாசு வெடித்தபோது ஏற்பட்ட விபத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில் தீபக் தாக்கூர் என்பவர் பட்டாசு மீது டம்ப்ளரை வைத்து வெடித்துள்ளார். அப்போது டம்ப்ளர் வெடித்து சிதறியதில், அதன் துகள்கள் சற்று தொலைவில் நின்றுகொண்டிருந்த சிறுவனின் வயிற்றில் குத்தியுள்ளது.

சிறுவன் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


