அவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் குண்டர்கள்- மத்திய அமைச்சர் ஆவேசம்

 

அவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் குண்டர்கள்- மத்திய அமைச்சர் ஆவேசம்

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்று அந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் ,அரியானா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரைக்கும் மத்திய அரசு விவசாயிகளிடம் பத்துக்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் இன்றைக்கும் தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கியிருக்கின்றனர் விவசாயிகள்.

அவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் குண்டர்கள்- மத்திய அமைச்சர் ஆவேசம்

மத்திய அரசு 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல்காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது விவசாயத்தை காப்போம் தேசத்தை காப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அனைவரும் கையில் இருக்கும் கோஷமிட்டனர்.

ஜந்தர் மந்தரில் விவசாயிகள், ’ விவசாயிகள் நாடாளுமன்றமும்’ என்ற மாதிரி நாடாளுமன்றத்தை நடத்தி வருகின்றனர். இன்றைக்கு தொடங்கியிருக்கும் மாதிரி நாடாளுமன்ற கூட்டம் ஒவ்வொரு நாளும் நடக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விவசாயிகள் அல்ல; அவர்கள் குண்டர்கள்- மத்திய அமைச்சர் ஆவேசம்

இன்றைக்கு நடந்த மாதிரி நாடாளுமன்றத்தின் போது பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். இதை அடுத்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் விவசாயிகளின் போராட்டத்தை கடுமையாக சாடினார்.

டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் விவசாயிகள் இல்லை. அவர்கள் குண்டர்கள் அவர்கள் செய்பவை எல்லாமே குற்றச் செயல்கள் என்று அதிரடியாக கருத்து தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் போராட்டத்தின்போது ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடந்தது வெட்கக்கேடான குற்றவாளிகளின் நடவடிக்கைகள். ஆனால் எதிர்க்கட்சிகளோ இதை விமர்சிக்காமல் கண்டிக்காமல் விவசாயிகளின் போராட்டத்தை ஊக்குவிக்கின்றன என்று ஆவேசப்பட்டார்.