சிறுநீரிலிருந்து வெடிகுண்டு செய்த பயங்கரவாதி- 11 பேரை பலி கொண்ட பின்னணி
11 பேரை பலி கொண்ட டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு பயங்கரவாதி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம். இந்த சம்பவத்தில், பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டது. டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு என்ஐஏ குழுவினர் விசாரணை நடத்தினர். செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் டாக்டர் முகமது உமர் பணியாற்றிய அல் ஃபலா மருத்துவமனையை சேர்ந்த மேலும் 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
11 பேரை பலி கொண்ட டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு பயங்கரவாதி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவரான உமர் உன் நபி சிறுநீரில் இருந்து யூரியாவை பிரித்தெடுத்து, வெடிகுண்டு செய்ததாக தேசிய புலனாய்வு முகமை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உமரின் இருப்பிடம், அவரது நடமாட்டம், அவர் கைபேசிகளைப் பயன்படுத்தியது மற்றும் வெடிபொருட்களைத் தயாரித்தது ஆகியவை குறித்து என்ஐஏ சாட்சி வாக்குமூலங்களையும் தடயவியல் ஆதாரங்களையும் சேகரித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முந்தைய நாள் வரை சுமார் 11 நாட்களாக உமர், நூஹ் நகரில் ஒரு வாடகை அறையில் வசித்து வந்தார். அங்குதான் அவர் வெடிபொருட்களைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.

