திருப்பதியில் பக்தர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையின் மேற்கூரை இடிந்து விபத்து- பக்தர்கள் அலறல்

 
ச்

திருப்பதியில் பக்தர்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையின் மேற்பகுதி திடீரென்று நள்ளிரவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

திருப்பதியில் உள்ள பிரபல  தனியார் ஓட்டல் ( மினர்வா கிராண்ட் ) ஓட்டல் அறைகளில் நேற்று இரவும் பக்தர்கள் வழக்கம்போல் தங்கியிருந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் திடீரென்று அந்த ஓட்டலில் உள்ள அறை ஒன்றின் மேற்பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த அறையில் தங்கியிருந்த பக்தர்கள் எழுந்து என்ன நடக்கிறது என்று புரியாமல் அலறி அடித்து கதவை திறந்து ஓட்டம் பிடித்தனர். சப்தம் கேட்டு மற்ற அறையில் தங்கியிருந்த பக்தர்களும் அறையில் இருந்து வெளியேறினர். இது பற்றி தகவல் அறிந்த திருப்பதி கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுத்து ஓட்டல் அறையின் மேற்பகுதி இடிந்து விழுந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடத்துகின்றனர். திருப்பதியில் பிரபலமாக இருக்கும் ஓட்டலில் நடைபெற்ற இந்த இடிபாடு அந்த ஓட்டல் கட்டுமானத்தின் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.