டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களுடன் கலக்கும் இந்திய ரிசர்வ் வங்கி…. உலக அளவில் பிரபலமான மத்திய வங்கி….

டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களுடன் கலக்கும் இந்திய ரிசர்வ் வங்கி…. உலக அளவில் பிரபலமான மத்திய வங்கி….

சர்வதேச அளவில் டிவிட்டரில் மிகவும் பிரபலமான வங்கியாக இந்திய ரிசர்வ் வங்கி உள்ளது. 10 லட்சம் பாலோயர்களுடன் ஆர்.பி.ஐ. முதல் இடத்தில் உள்ளது.

இந்திய ரிசர்வ வங்கி (ஆர்.பி.ஐ.) 2012ம் ஆண்டில் டிவிட்டரில் கணக்கை தொடங்கியது. ஆர்.பி.ஐ.க்கு டிவிட்டரில் @RBI, @RBIsays என்ற 2 கணக்குகள் உள்ளன. முதல் டிவிட்டர் கணக்கு (@RBI) முக்கிய கொள்கை முடிவுகளை வெளியிட பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவது கணக்கு (@RBIsays) பொது விழிப்புணர்வு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.

டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களுடன் கலக்கும் இந்திய ரிசர்வ் வங்கி…. உலக அளவில் பிரபலமான மத்திய வங்கி….
சக்திகந்த தாஸ்

கடந்த ஏப்ரல் மாதம் டிவிட்டரில் இந்திய ரிசர்வ் வங்கி கணக்கை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 7.50 லட்சத்தை தொட்டது. நேற்று டிவிட்டரில் இந்திய ரிசர்வ் வங்கியை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது. இந்த தகவலை ஆர்.பி.ஐ. கவர்னர் சக்திகந்த தாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், ஆர்.பி.ஐ. டிவிட்டர் கணக்கு இன்று 10 லட்சம் பாலோயர்ஸை தொட்டது. ஒரு புதிய மைல்கல். ரிசர்வ் வங்கியில் உள்ள எனது சக ஊழியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று பதிவு செய்து இருந்தார்.

டிவிட்டரில் 10 லட்சம் பாலோயர்களுடன் கலக்கும் இந்திய ரிசர்வ் வங்கி…. உலக அளவில் பிரபலமான மத்திய வங்கி….
இந்திய ரிசர்வ் வங்கி டிவிட்டர் கணக்கு

டிவிட்டரில் பாலோயர்கள் அடிப்படையில் உலக நாடுகளின் மத்திய வங்கிகளில் இந்திய ரிசர்வ் வங்கி முதலிடத்தில் உள்ளது. டிவிட்டரில் இந்திய ரிசர்வ் வங்கி கணக்கை 10 லட்சம் பேர் பின் தொடருகின்றனர். மற்ற நாடுகளின் மத்திய ரிசர்வ் வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியை காட்டிலும் மிகவும் பின்தங்கி உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கிக்கு அடுத்தப்படியாக மெக்சிகோவின் பான்கோ டி மெக்சிகோ 7.74 லட்சம் பாலோயர்களுடன் உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியாவின் மத்திய வங்கி 7.57 லட்சம் பாலோயர்களுடன் உள்ளது.