அவகாசம் கேட்ட முதல்வர் மகள்! விசாரணை தள்ளிவைப்பு

 
kk

முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா இன்று நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.  வரும் 11ம் தேதி ஆஜராவதாக  அவகாசம் கேட்டதை அடுத்து விசாரணையை தள்ளி வைத்திருக்கிறது  அமலாக்கத்துறை.   

 தெலுங்கானா மாநிலத்தின் முதல்வர் சந்திரசேகர ராவ் . இவரது மகள் கவிதா.  மேலவை உறுப்பினரான கவிதாவை டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் விவகாரத்தில் இன்று9.3.2024ல்  நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் தொடர்புடைய அமித் அரோராவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்திருக்கும் காவல் அறிக்கையில் கவிதாவின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   இதுவரை நடந்த விசாரணையில் சரத் ரெட்டி,  மகுந்தா சீனிவாலு ரெட்டி , கவிதா ஆகியோரால் நடத்தப்படும் சவுத் குருப்பிடம் இருந்து அமித் அரோரா உட்பட பல்வேறு நபர்களால் ஆம் ஆத்தி கட்சி தலைவர்களுக்கு விஜய் நாயர் மூலம் 100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது .

lc

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு கவிதா லஞ்சம் கொடுத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டிருக்கிறது.  இதே போல் வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று சிபிஐ 7 பேர் மீது தனது முதல் குற்ற பத்திரிகை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து கவிதாவிடம் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்தது .  அதன்படி ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கவிதா இல்லத்திற்கு டெல்லியில் இருந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி அன்று நேரில் சென்று விசாரணை நடத்தினர் .

அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  அந்த கேள்விகளுக்கு பெற்ற பதில்களை பதிவு செய்து கொண்டனர் . இந்த விசாரணை 7 மணி நேரம் நீடித்தது. இந்த விசாரணையை ஒட்டி கவிதாவின் வீடு அமைந்திருக்கும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது .  இந்த நிலையில் தற்போது இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.  

இன்றைய தினத்திற்கு பதிலாக வரும் 11.3.2023ல் ஆஜராவதாக அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதி இருந்தார் கவிதா.  இதை ஏற்றுக்கொண்டு விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது அமலாக்கத்துறை.