'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாளை 37க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது!

 
the kerala story

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ”தி கேரளா ஸ்டோரி”.கேரளாவைச் சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்த  32,000 பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு  கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, அங்கு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டு,  ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைக்கப்படுவது போன்று  காட்சிகள் அந்த ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, விவாதப் பொருளாகவும் மாறியது.  இந்த படத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் 13 தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து இந்த திரைப்படம் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்தன. 
 
இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் நாளை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடிகை அடா ஷர்மா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "எங்கள் படத்தை பார்க்கப் போகும் கோடிக்கணக்கான மக்களுக்கும், அதனை ட்ரெண்ட் செய்பவர்களுக்கும் என்னுடைய நடிப்பை ரசிப்பவர்களுக்கும் நன்றி. இந்த வார இறுதியில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் 37-க்கும் மேற்பட நாடுகளில் வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.