"2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு" - பிரதமர் மோடி

 
tn

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும் என்று

பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Parliament

இந்நிலையில் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சந்திரயான்-3 விண்கலம் நமது மூவர்ண கொடியை நிலவில் உயர்த்தியுள்ளது; இதுபோன்ற சாதனையை நிகழ்த்தும்போது, அது நவீனம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது; இந்த வெற்றியின் மூலம் பல வாய்ப்புகளும் சாத்தியங்களும் இந்தியாவின் கதவுகளைத் தட்டுகின்றன.


நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக் கூடியதாக அமையும். அனைத்து உறுப்பினர்களும் சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்க வேண்டும். 2047-ல் வளர்ந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதே இலக்கு. இந்தியாவின் முன்னேற்றத்தை உலகமே பாராட்டுகிறது" என்றார்.