போலீசில் பிடிபட்டதால் வாகனத்துக்கு தீவைத்த போதை ஆசாமி

 
Fire

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட நபர் இருசக்கர வாகனத்தை எரித்த  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் தலைமை தபால் நிலையம் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் நேற்று இரவு ஈடுப்பட்டு வந்தனர். அப்போது வாரங்கல் பகுதியை சேர்ந்த புலிசேரு சிவா என்பவர் மது அருந்தி அவ்வழியாக   தனது  (ஏபி36 ஏசி 0160) என்ற பதிவு எண் கொண்ட பைக்கை ஓட்டிச் சென்றுள்ளார். போலீசார் வாகனங்களைச் சோதனை செய்து கொண்டுருந்தபோது சிவா குடிபோதையில் சாலையைக் கடக்கும்போது போலீசாரிடம் சிக்கினார். 

வாரங்கல் போக்குவரத்து எஸ்.ஐ. ரவி வழக்கு பதிவு செய்ய முயன்றபோது ஆத்திரமடைந்த சிவா வாகனத்தில் இருந்த பெட்ரோல் பைப்பை கழற்றி தீ  வைத்து எரித்தார்.  உடனடியாக உடன் இருந்த போலீசார்   அருகில் இருந்த கடைகளில் இருந்த தண்ணீர் கேன்கள் மூலம் தீயை அணைத்து வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் வாரங்கல் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்திற்கு கொண்டு சென்றனர். அவரது வாகனத்தை போலீசார் எடுத்துச் சென்றதால், மேலும் ஆத்திரமடைந்த சிவா வாகனத்தை நான் ஓட்டி பிடிபடவில்லை என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.  இந்த தகவல் வைரலாக பரவியதால் சிவாவிடம்   பைக்கை ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.