ராமர் கோயில் நன்கொடை வசூல் ரூ.2,500 கோடியை எட்டியது.. வீடு வீடாக நன்கொடை திரட்டுவது நிறுத்தம்…

ராமர் கோயில் நன்கொடை வசூல் ரூ.2,500 கோடியை எட்டியது.. வீடு வீடாக நன்கொடை திரட்டுவது நிறுத்தம்…

மார்ச் 4ம் தேதி நிலவரப்படி, ராமர் கோயில் கட்டுமான பணிக்கு திரட்டப்பட்ட நிதி ரூ.2,500 கோடியாக உள்ளது என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்துக்களின் கனவான ராமர் கோயிலின் கட்டுமான பணிகள் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைமையில் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுமான பணிக்கான நன்கொடை வசூல் கடந்த ஜனவரி 15ம் தேதியன்று தொடங்கியது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தகவல்படி, வங்கிகளின் ரசீதுகளின்படி கடந்த 4ம் தேதி நிலவரப்படி, ராமர் கோயிலுக்கு திரட்டப்பட்ட நன்கொடை ரூ.2,500 கோடியாக உள்ளது. இது ராமர் கோயில் வளாக கட்டுமானத்துக்கு செலவாகும் என மதிப்பிடப்பட்ட தொகையை காட்டிலும் சுமார் 1,500 கோடி ரூபாய் அதிகமாகும்.

ராமர் கோயில் நன்கொடை வசூல் ரூ.2,500 கோடியை எட்டியது.. வீடு வீடாக நன்கொடை திரட்டுவது நிறுத்தம்…
சம்பத் ராய்

ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் சம்பத் ராய் கூறுகையில், ராமர் கோயிலுக்காக வீடு வீடாக சென்று நன்கொடை திரட்டுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வலைதளத்தில் மக்கள் நன்கொடை செலுத்தலாம். ராமர் கோயில் முன்பு உள்ள நிலத்தை வாங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால் இன்னும் முடிவு செய்யவில்லை.

ராமர் கோயில் நன்கொடை வசூல் ரூ.2,500 கோடியை எட்டியது.. வீடு வீடாக நன்கொடை திரட்டுவது நிறுத்தம்…
சித்தராமையா

ராமர் கோயில் கட்டுமான பணிகள் 3 ஆண்டுகளில் முடிவடையும் என்று தெரிவித்தார். ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூல் தொடங்கப்பட்டது முதல் அதனை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அயோத்தி ராமர் பெயரில் திரட்டப்பட்ட நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட உள்ளது என்பதை அறிய அனைவருக்கும் உரிமை உண்டு என்று கர்நாடகா காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான சித்தராமையா பேசியது குறிப்பிடத்தக்கது.