டெல்லி அரசின் அதிகாரத்தை, அவசர சட்டம் இயற்றி பறித்த மத்திய அரசு..

 
டெல்லி அரசின் அதிகாரத்தை, அவசர சட்டம் இயற்றி பறித்த மத்திய அரசு..


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உறுதி செய்த அதிகாரத்தை, அவசரச் சட்டத்தின்மூலம்  ஒன்றிய அரசு பறித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதை எதிர்த்து ஆம் ஆத்மி அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இட மாற்றத்தில்  மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என  தீர்ப்பு வழங்கியது.  ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசுக்குகே நிர்வாக அதிகாரம் உள்ளதாகவும்,  மக்களால் தேர்வான அரசுக்கு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகி விடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Central Govt

மேலும், அரசுக்கு அதிகாரம் வழங்கப்படாவிட்டால்  மாநில அமைச்சர்கள் குழு உத்தரவை அதிகாரிகள் கேட்காத நிலை ஏற்படும் என்றும்,    மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அறிவுறுத்தினர்.  டெல்லியில் அன்றாட நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ள துணைநிலை ஆளுநரை விட முதலமைச்சருக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.  

துணைநிலை ஆளுநர் மாநில அமைச்சரவையின் பரிந்துரைபடியே செயல்பட வேண்டும் என்றும்,  மாநில அமைச்சரவை முடிவுக்கு கட்டுப்பட்டவர் ஆளுநர் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மத்திய அரசு பறித்துக்கொண்டுள்ளது.  உச்சநீதிமன்றம் பிறப்புத்த உத்தரவை ரத்து செய்யும் வகையில், மத்திர அவரச சட்டம் இன்றை கொண்டுள்ளது. நிர்வாக விவகாரங்களில் மத்திய அரசின் பிரதிநிதியான துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.