புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்ற மத்திய அரசு
Aug 8, 2025, 17:32 IST1754654560401
கடந்த பிப்.13-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கடந்த பிப்.13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு திரும்பப்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வருமான வரி மசோதா ஆகஸ்ட் 11ஆம் தேதி மக்களவையில் மீண்டும் அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பைஜயந்த் பாண்டா தேர்வுக் குழு பரிந்துரைகளை உள்ளடக்கிய வருமான வரி மசோதாவின் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருட பட்ஜெட்டில் அறிவித்தது குறிப்பிடதக்கது.


