மணமேடையில் மடியில் படுத்து தூங்கிய மணமகன்! மணமகளுக்கு வந்த ஆத்திரம்

 
m

மணமேடையில் போதையில் தள்ளாடியபடியே வந்த மாப்பிள்ளை மண மேடையிலேயே ஒருவரின் மடியில் தலை வைத்து தூங்க இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் திருமணத்தை நிறுத்தி இருக்கிறார்.   அசாம் மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.  

 அசாம் மாநிலத்தில் நல்பாரி மாவட்டத்தில் நல்பரி என்ற நகரம்.   இந்நகரத்தில் கடந்த 2ஆம் தேதி அன்று  நடந்த ஒரு திருமணத்தில் தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் செய்து வந்திருக்கிறார்கள் .  திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் சுற்றுலா வந்திருக்கிறார்கள். 

 திருமணத்தில் தாலி கட்டுவதற்கு முன்பாக மணமகன் பட்டி வேட்டி சட்டையில்  உட்கார வைக்கப்பட்டு இருந்திருக்கிறார் .  திருமண சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது மணமகனின் நடவடிக்கையை பார்த்த அனைவருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது . குறிப்பாக மணமகளுக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

g

 மதுபோதையில் தள்ளாடியபடியே அமர்ந்திருந்த மணமகன்,  ஒரு கட்டத்தில் மேடையில் அமர்ந்திருக்க முடியாமல் திடீரென்று சாய்ந்து இருக்கிறார்.  அப்போது ஒருவர் பிடித்துக் கொள்ள அவரின் மடியிலே படுத்து தூங்கி இருக்கிறார்.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகள் மாப்பிள்ளை நடவடிக்கை குறித்து பெற்றோரிடம் புகார் அளிக்க பெற்றோரும் உன் விருப்பம் என்று சொல்ல,  திருமணத்தை உடனே நிறுத்தி இருக்கிறார் மணமகள்.

மணமேடைக்கு வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டு  மணமகள் அறையிலேயே இருந்திருக்கிறார்.  திருமணத்தை நிறுத்த முடிவு செய்த மணப்பெண் வீட்டார் உடனே போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள் .  உடனே  திருமண செலவுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று மணமகள் வீட்டாரும் வலியுறுத்தி இருக்கிறார்கள். போலீசா வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.  இது எல்லாம் நடந்தபோது என்ன நடக்கிறது என்று தெரியாமல் மணமகன் போதையில் மணமேடையில் தூங்கி இருக்கிறார்.

 மணமகன் போதையில்  மணமேடையில் தள்ளாடியும் காட்சிகளும் ஒருவரின் மடியில் படுத்து தூங்கும் காட்சியும் வீடியோவாக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.