"இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்" - அரவிந்த் கெஜ்ரிவால் காட்டம்!!

 
tn

புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. மே 23ஆம் தேதியிலிருந்து 2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் , செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகும்  2000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tn

தினமும் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றலாம். வங்கிகளில் செலுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது. கிளீன் நோட் பாலிசி என்ற அடிப்படையில் 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . 2018-19 ஆம் ஆண்டு முதல் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தப்பட்டது. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்பு 89 சதவீதம் ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்ட நிலையில் தற்போது அவை திரும்ப பெறப்பட்டுள்ளது.

aravind

இந்நிலையில்  டெல்லி முதல்வரும் , ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், “முதலில் ரூ.2000 நோட்டை கொண்டு வந்தால் ஊழல் ஒழியும் என்றனர். இப்போது, ரூ.2000 நோட்டை தடை செய்வதன் மூலம் ஊழல் தடுக்கப்படும் என்கின்றனர். இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். படிக்காத பிரதமரிடம் யாரும் எதுவும் சொல்லிவிட முடியும். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்படவேண்டும்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.