பிரபல பின்னணிப் பாடகி தற்கொலை முயற்சி
Mar 4, 2025, 21:50 IST1741105205927

பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்று கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
பிரபல பாடகி கல்பனா தெலங்கானா மாநிலம் ஐதாராபாத் நிஜாம்பேட்டையில் வசிக்கிறார். இவரது வீட்டின் கதவுகள் இரண்டு நாட்களாக திறக்காததால் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு வந்து கதவுகளை உடைத்து பார்த்தபோது கல்பனா சுயநினைவு இல்லாமல் இருந்தார். உடனடியாக கல்பனாவை குக்கட்ப்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எதற்காக கல்பனா தற்கொலை செய்து கொண்டார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.