ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீட்டை தாக்க முயன்ற தெலுங்கு தேச கட்சியினர்

 
attack

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வீட்டை தாக்க முயன்ற தெலுங்கு தேச கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.

மக்களவைத் தேர்தலை பொறுத்தவரையில் ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளுக்கும், தெலங்கானாவின் 17 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இது தவிர ஒடிசா - 4, பிகார் - 5, ஜார்க்கண்ட் - 4, மத்திய பிரதேசம் - 8, மகாராஷ்டிரா - 11, உத்தர பிரதேசம் - 13, மேற்கு வங்கம் - 8, ஜம்மு காஷ்மீர் - 1 ஆகிய மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மேலும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலும் இன்று ஒரே கட்டமாக 175 தொகுதிகளில் நடைபெறுகிறது. மேலும் ஒடிசா மாநிலத்திலும் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்டம் இன்று நடைபெற்றது.


இந்நிலையில் ஆந்திரா  மாநிலம் குண்டூர் மாவட்டம் நரசா ராவ்பேட்டை  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ வேட்பாளர் கோபிரெட்டி ஸ்ரீனிவாஸ் வீட்டை தெலுங்கு தேசம் கட்சியினர் தாக்க முயன்றனர். கார்கள் மற்றும் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.  இதையடுத்து களத்தில் இறங்கிய போலீசார் போராட்டக்காரர்கள் மீது ரப்பர் தோட்டாக்களை வீசினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.