பெங்களூருவில் போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமா கைது

 
hema

போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமாவை போலீசார் கைது செய்தனர்.


கடந்த மே 20ம் தேதியன்று பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் நடந்த ரேவ் பார்ட்டியில் போலீசார் சோதனை நடத்தினர். போலீஸ் சோதனையின் போது, ஆந்திரா, கர்நாடக திரை உலகினர் பங்கேற்றது தெரியவந்தது. ரேவ் பார்ட்டி தொடர்பாக, தெலுங்கு நடிகை ஹேமாவிடம் விசாரணை நடத்திய போலீசார், நடிகை ஹேமாவின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தனர். அதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போதை விருந்து வழக்கில் தெலுங்கு நடிகை ஹேமாவை போலீசார் கைது செய்தனர்.

விருந்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நிலையில், ஆந்திர மாநில எம்.எல்.ஏ.வின் கார் பறிமுதல் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். பிறந்தநாள் விழா என்ற பெயரில், பெங்களூரில் போதைப்பொருட்களுடன் நள்ளிரவில் நடைபெறும் பார்ட்டியால் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது.