காருக்குள் சிக்கிய இரு குழந்தைகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

தெலங்கானாவில் தாய் மாமா திருமணத்திற்கு வந்த இடத்தில் காரில் ஏறி சிறுமிகள் விளையாடி கொண்டிருநந்த போது கதவுகள் ஆட்டோலாக் ஆனதால் இரண்டு குழந்தைகள் மூச்சுத் திணறி இறந்தனர்.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் பமேனா கிராமத்தைச் சேர்ந்த கவாலி வெங்கடேஷ் மற்றும் ஜோதியின் மகள் தன்மயிஷ்ரி (5), ஷாபாத் மண்டலத்தில் உள்ள சீதாராம்பூர் கிராமத்தைச் சேர்ந்த மகேந்தர் மற்றும் உமாராணியின் மகள் அபிநயிஷ்ரி (4) ஆகியோர் தங்கள் தாய் மாமாவான தெலுங்கு ராம்பாபுவின் திருமணத்திற்காக மரிகிடா கிராமத்திற்கு வந்தனர். வீட்டில் உறவினர்கள் அனைவரும் வந்திருந்த நிலையில் இரண்டு குழுந்தைகளின் பெற்றோர்கள் அவர்களுடன் பேசி கொண்டுருந்தனர். ராம்பாபுவின் கார் வெளியே நிறுத்தப்பட்டுருந்ததால் மதியம் 12:30 மணிக்கு வீட்டின் முன் விளையாடி கொண்டே தன்மயிஷ்ரி, அபிநயிஷ்ரி இருவரும் காரில் ஏறினர். குழந்தைகள் காரில் இருப்பதை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் யாரும் கவனிக்கவில்லை. அவர்கள் இருவரும் வெளியே எங்கோ விளையாடிக் கொண்டிருப்பதாக நினைத்தார்கள். ஆனால் காரில் குழந்தைகள் ஏறியவுடன் கார் ஆட்டோ லாக் ஆனதால் சிறிது நேரம் எதுவும் தெரியாமல் விளையாடி கொண்டிருந்தனர்.
மதியம் வேலை என்பதால் வெயில் சுட்டெரித்த நிலையில் காரில் உள்ளே சிக்கிய குழுந்தைகளுக்கு முச்சு விடமுடியமால் திணறி இருவரும் இறந்தனர். மதியம் 2 மணியளவில், குழந்தைகளைத் நீண்ட நேரம் காணவில்லை என்பதால் பெற்றோர் வீட்டில் பல தேடியபோது எங்கும் இல்லாததால் காரில் பார்த்தபோது இரண்டு குழுந்தைகளும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காரை இருவரையும் செவெல்லா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். குழந்தைகளின் இருவரும் இறந்ததால் திருமண வீட்டில் சோகத்தை ஏற்படுத்தியது.