திடீரென தடம் புரண்ட 11 பெட்டிகள்! 39 ரயில்கள் ரத்து
தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டதில் 11 பெட்டிகள் கவிழ்ந்ததில் 3 தண்டவாளங்கள் சே அடைந்தது
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் காஜிப்பேட்டை நோக்கி இரும்பு லோடு ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரயில் தெலங்கானா மாநிலம் ராயவரம் - ராமகுண்டம் இடையே உள்ள ராகவ்பூர் என்ற இடத்தில் வந்த போது 11 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் திடீரென 11 பெட்டிகள் கவிழ்ந்தது.
இதனை அப்பகுதி மக்கள் அடையாளம் கண்டு ரயில்வே துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் உஷார்படுத்தப்பட்ட அதிகாரிகள் ரயில்களை ஆங்காங்கே நிறுத்தினர். அதிவேக விரைவு ரயில்களுடன் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் அங்காங்கே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டது. டெல்லி - சென்னை இடையே தெற்கில் இருந்து நோக்கி செல்லும் பிரதான ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் 39 ரயில்கள் ரத்து செய்ததோடு 7 ரயில்கள் பகுதி அளவிலும், 53 ரயில்கள் வெவ்வேறு வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது. 7 ரயில்கள் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த சரக்கு ரயிலின் பெட்டிகளை அகற்றி தண்டவாளத்தில் இருந்து கனரக கிரேன்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது . விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரக்கு ரயில் என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.