தெலங்கானாவில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்- காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு

தெலங்கானா தேர்தலின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
தெலங்கானா மாநிலத்தில் 119 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட இங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. இருந்தபோதும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு வெளியிட்டில் காங்கிரஸ் வேட்பாளர் விவேக் வெங்கடசாமி சென்னூர் காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் தான் அங்கு போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப்பெரிய பணக்காரராக அறியப்படுகிறார். அவருக்கு மொத்தமாக ரூ.606.66 கோடிக்கு சொத்துமதிப்பு உள்ளது. அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் அடிப்படையில் அவருக்கும் அவரது மனைவிக்கும் கிட்டத்தட்ட ரூ.41.5 கோடி கடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக எம்.பி.யான விவேக் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து போட்டியில் களம் இறங்கி உள்ளார்.
தெலுங்கானாவில் சட்டசபை தேர்தலுக்கான காலக்கெடு நெருங்கி வருவதால், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அனைத்து முக்கிய கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் தலைவர்களும், வீடு வீடாக கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்கள் வாக்கு சேகரித்து வருகின்றனர். 30-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தவுள்ள நிலையில் இன்னுன் 8 நாட்களே உள்ளதால் அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் தேர்தல் பிரசாரத்தில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கி உள்ளனர். இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர் ஜி விவேகானந்தன் என்கிற (ஜி விவேக்) வீட்டில் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தலில் அவர் மாஞ்சிரியால் மாவட்டம் சென்னூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரது வீட்டில் இன்று காலை முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னூரில் உள்ள விவேக்கின் வீடு மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சோமாஜிகுடாவில் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் மீது ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. விவேக்கின் உறவினர்கள் மற்றும் சில முக்கிய ஆதரவாளர்கள் வீடுகளில் என 20 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கனவே இதேபோன்று முன்னாள் எம்பி பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி, மகேஸ்வரம் காங்கிரஸ் வேட்பாளர் கிச்சன்நகரி லக்ஷ்மரெட்டி, முன்னாள் அமைச்சர் ஜனா ரெட்டி ஆகியோரின் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்டது.
ஜீ விவேக் ஒரு மாதம் முன்பு வரை பாஜகவில் இருந்த நிலையில் காங்கிரசில் இணைந்து போட்டியிடக்கூடிய நிலையில் விவேக் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு விவேக்கிற்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பணபரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.8 கோடியை வருமான வரித்துறை முடக்கம் செய்த நிலையில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.