மழையால் இடிந்து விழுந்த வீடு- தூக்கத்தில் பிரிந்த 4 பேரின் உயிர்

 
மழையால் இடிந்து விழுந்த வீடு- தூக்கத்தில் பிரிந்த 4 பேரின் உயிர்

தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூலில் இரவு பெய்த மழையின் காரணமாக மாடி வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர்.

Four of family killed after mud roof collapses on them in Nagarkurnool.

தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் வனபட்லா கிராமத்தை சேர்ந்த கொடுகு பாஸ்கர் பத்மா (28) கணவன், மனைவி. இவர்களுக்கு பாப்பி (6), வசந்தா (7) என்ற இரு மகள்களும், விக்கி (ஒரு வருடம் மூன்று மாதங்கள்) ஆன மகனும் உள்ளனர். பாஸ்கர் ஆட்டோ ஓட்டி சம்பாதித்து குடும்பம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில்  வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு இரவு வீட்டில் தூங்கினர். ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக மண்ணால் கட்டப்பட்ட மாடி வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தாய் இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பாஸ்கரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவரது  நாகர் கர்னூல் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து  செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. நாகர் கர்னூல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.