வரதட்சணை குறைவாக இருந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

 
marriage

தெலுங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில் பெண்ணுக்கு வரதட்சனையாக இரண்டு லட்ச ரூபாய் போதாது என திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் செயல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Marriage

தெலங்கானா மாநிலம் மல்காஜ்கிரி மாவட்டம் போச்சரம் பேரூராட்சியை  சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வராப்பேட்டையைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள காட்கேசரில் வியாழக்கிழமை இரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த திருமணத்தில்  வரதட்சணை தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே வினோதமான ஒப்பந்தம் ஏற்பட்டது. இங்கு மணமகன்  பெண் வீட்டாருக்கு எதிர் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

முதலில் பெண்ணின் உறவினர்கள் அதிகமாகக் வரதட்சணை கேட்டனர். ஆனால் இறுதியில் ரூ.2 லட்சம் தருவதாக பெரியவர்கள் முன்னிலையில் பேசி கொள்ளப்பட்டு அதற்குண்டான பணமும் பெண் வீட்டாருக்கு வழங்கினர். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 7:21 மணிக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருமணத்திற்கு மேடை அலங்காரம் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்காக மணமகனின் உறவினர்கள் முகுர்த்தத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். ஆனால் மணப்பெண் வீட்டார் மட்டும் வரவில்லை. முகுர்த்த நேரத்திற்கு முன் வர  வேண்டியவர்கள்  நேரம் கடந்தும் யாரும் வரவில்லை.  

மணமகனின் உறவினர்கள் விசாரித்தபோது, ​​மணமகள் வீட்டார் கூறிய பதிவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தங்களுக்கு மணமகன் வீட்டார் வழங்கிய  வரதட்சணை ₹.2 லட்சம் போதாது, மேலும் வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் நடக்கும் எனக் கூறினர். என்ன செய்வது என்று தெரியாமல் மணமகனின் உறவினர்கள் போலீசை அணுகினர்.  போலீசார் எவ்வளவு சமாதானம் கூறினாலும்,  வரதட்சணை விவகாரத்தில் பெண் வீட்டார்  பின்வாங்காததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. மணமகளுக்கு  வழங்கப்பட்ட வரதட்சணை ₹.  2 லட்சமும் பெண் வீட்டார் திருப்பி வழங்கிவிட்டு சென்றனர்.