டெல்லியில் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினா் கலைந்து செல்வதற்காக கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்டவற்றால் நாட்டின் கல்வித் துறையை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்ற நிர்வாக தோல்விகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி நாடு முழுவதும் குரல்கள் வலுத்து வருகின்றன. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லி வீதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தை முற்றுகையிட பேரணி செல்கின்றனர். தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று நாடு முழுவதும் SFI உள்ளிட்ட இடது சாரி அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றனர்.
நீட் தேர்வு முறைகேட்டிற்கு முட்டு கொடுக்கும் மாட்டு மூத்திர குடிக்கிகள்…
— VR Meadia “ nerpada pesu” (@velu_ramavel) July 20, 2026
டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக போராடும் இளைஞர்கள், மாணவர்கள் மீது கண்ணீர் புகை, நீர் பீய்ச்சி அடிப்பு பிஜேபி அரசின் தாக்குதலுக்கு கடும் கண்டனம்.#CJB #SFI #DYFI #delhi pic.twitter.com/z9DJmMMQkT
டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட கரப்பான் பூச்சி கட்சியினா் கலைந்து செல்வதற்காக கண்ணீா் புகை குண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூடு கூட நடத்த தயாராகி வரும் காணொளிகள் வெளியாகியுள்ளன. டெல்லிக்கு அருகில் இருக்கக்கூடிய பல்வேறு மூடப்பட்ட மெட்ரோ நிலையங்கள் வாசலில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து இருக்கிறார்கள். கூட்ட நெரிசல் ஏற்படும் ஆபத்தான சூழல் நிலவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கண்ணீர் புகை குண்டுகளுக்கும் காவல்துறையினரது தடியடிக்கும் பயந்து ஏராளமான மெட்ரோ நிலையங்களின் வாசல்களில் குவிந்து வருவதால் பதட்டமான சூழல் நிலவுகிறது.

