மொட்டையடித்து வந்த மாணவனின் தலையில் தபேலா வாசித்த ஆசிரியர்- வீடியோ வைரல்

 
s

உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவில் உள்ள தொடக்கப் பள்ளியில், மாணவனின் மொட்டையடிக்கப்பட்ட தலையில் தபேலா வாசிப்பது போல தட்டி, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.



உத்தரப் பிரதேசத்தின் எட்டாவாவில் உள்ள தொடக்கப் பள்ளியில், மாணவனின் மொட்டையடிக்கப்பட்ட தலையில் தபேலா வாசிப்பது போல தட்டி, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். எட்டாவா மாவட்டத்தின் சைஃபை வட்டாரத்தில் உள்ள பிரௌலி தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. அந்த நபர், அப்பள்ளியின் உதவி ஆசிரியர் தினேஷ் குமார் மாத்தூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். வைரலான அந்தக் காணொளியில், மாத்தூர் ஒரு வகுப்பறை நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி மாணவர்கள் தரையில் அமர்ந்திருக்கின்றனர். 

ஒரு குழந்தை அவரைப் பார்த்தபடி நிற்க, மாத்தூர் அந்தக் குழந்தையின் தலையில் தபலாவை உற்சாகமாகத் தட்டி, வீடியோ முழுவதும் கட்டுக்கடங்காமல் சிரித்துக்கொண்டிருக்கிறார். அந்த வீடியோவைப் பதிவு செய்தது யார் என்று தெரியவில்லை என்றாலும், மாத்தூர்தான் அந்தக் காணொளியைத் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இருப்பினும், அந்த வீடியோ வைரலானதால், ஆசிரியரின் இந்தச் செயல் குறித்துக் கல்வித்துறைக்குப் புகார்கள் குவிந்தன. பிரச்சனைகளைக் கவனத்தில் கொண்டு, அடிப்படை கல்வி அதிகாரி (பிஎஸ்ஏ) டாக்டர் ராஜேஷ் குமார் விரைந்து நடவடிக்கை எடுத்து, ஆசிரியரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்தார்.