‘மக்கள் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துவேன்’ – தமிழிசை பேட்டி!

 

‘மக்கள் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துவேன்’ – தமிழிசை பேட்டி!

புதுச்சேரி அரசியல் களத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அங்கு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமைச்சர்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்தது முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு நெருக்கடியை கொடுத்திருக்கிறது. இது மட்டுமில்லாமல், ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. கிரண்பேடியை பதவி நீக்கம் செய்யக்கோரி முதல்வர் நாராயணசாமி போராட்டம் நடத்தினார்.

‘மக்கள் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துவேன்’ – தமிழிசை பேட்டி!

இதையடுத்து முதல்வர் நாராயணசாமியை பதவி நீக்கம் செய்த குடியரசுத் தலைவர், தமிழிசை சௌந்தரராஜனை புதுச்சேரி ஆளுநராக நியமித்து உத்தரவிட்டார். தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் தமிழிசை, புதுச்சேரியையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி, தமிழிசை சௌந்தரராஜன் நேற்று பதவியேற்றார். பதவியேற்ற மறுநாளே (அதாவது இன்று) முதல்வர் நாராயணசாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதினார்.

‘மக்கள் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துவேன்’ – தமிழிசை பேட்டி!

இந்த நிலையில், புதுச்சேரி முதலியார்பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொறுப்பு ஆளுநர் தமிழிசை ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் எனது ஆளுமைக்கு உட்பட்டு மக்கள் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்துவேன் என்று தெரிவித்தார்.