நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!

 

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!

திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் வில்லனாக நடிக்க ஆரம்பித்து தற்போது இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். ரஜினிக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரஜினியை பிடிக்காதவர்கள் என்று யாருமே இல்லை. தற்போது வரை 150ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினி தொட்டதெல்லாம் வெற்றியே என்ற நிலையில் தற்போது அரசியலிலும் கால் பதிக்கவும் தயாராக இருந்தார்.ஆனால் திடீர் உடல்நிலை காரணமாக அரசியல் பிரவேச முடிவு நிரந்தரமாக கைவிடப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!

இந்நிலையில் தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். திரைத் துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது!

இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காக ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமிதாபச்சன் ,வினோத் கண்ணா, லதா மங்கேஷ்கர் ,கன்னட நடிகர் ராஜ்குமார், கேரள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றோருக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைத்துறையில் நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலச்சந்தர் ஆகியோர் தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.