தமிழகத்தை முன்னுதாரணமாக கொண்டு தெலங்கானாவிலும் ‘காலை உணவு திட்டம்’

தமிழகத்தை முன் உதாரணமாக கொண்டு பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க தெலுங்கானா மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி காலையிலும் உணவு அருந்தி பள்ளியில் பாடம் கற்பிக்கும் விதமாக தமிழக அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த திட்டம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தெலுங்கானா மாநில அரசு தமிழக அரசு செய்து வரும் காலை சிற்றுண்டி திட்டத்தை நேரில் பார்வையிட்டு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வை தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் தெலுங்கானா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்குவது போன்று அக்டோபர் 24ஆம் தேதி விஜயதசமி முதல் காலை சிற்றுண்டி வழங்கும் விதமாக உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் மற்ற மாநிலங்களுக்கும் முன்னொடி திட்டமாக மாறி உள்ளது.