லாலு குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட சோதனையால் முதல்வர் நிதிஷ் குமார் மகிழ்ச்சி.. மகா கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தும் பா.ஜ.க.

 
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது வெங்காயம் வீசி தாக்கிய நபர்கள்… பிரச்சார கூட்டத்தில் பரபரப்பு

லாலு குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்று பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி தெரிவித்தார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. கடந்த 2004-09 காலகட்டத்தில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், பீகாரை சேர்ந்த சிலருக்கு ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

லாலு பிரசாத் யாதவ்

மேலும், ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத்துறை அண்மையில் சோதனை நடத்தினர். மேலும், லாலுவின் மகள்கள் சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராகிணி யாதவ் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அபு டோஜானா உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், லாலு குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட சோதனையால் நிதிஷ் குமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார் என்று மகா கூட்டணிக்குள் பா.ஜ.க. புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கட்சி ஊழியராக எனது பதவியை யாரும் பறிக்க முடியாது…. பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி
பா.ஜ.க.வின் மாநிலங்களவை எம்.பி. சுஷில் மோடி கூறியதாவது: தேஜஸ்வி யாதவை முதல்வராக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் தரப்பில் இருந்து வந்த அழுத்தம் தற்போது முடிவுக்கு வரும் என்பதால், லாலு குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட சோதனையில் முதல்வர் நிதிஷ் குமார் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தேஜஸ்வி யாதவ் சிறைக்கு செல்ல வேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதனால்தான் சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்த வேண்டும் என்று நிதிஷ் குமார் கூறுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.